அரசு பள்ளிகளில் அடிப்படை வசதி கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம்
திருத்தணி, செப். 9– திருத்தணி வருவாய் கோட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், தேவையான அடிப்படை வசதிகள் குறித்து,
திருத்தணி வருவாய் கோட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், தேவையான அடிப்படை வசதிகள் குறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணிகளை தொடங்கியுள்ளனர்.
திருத்தணி வருவாய் கோட்டத்தில், திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, திருவாலங்காடு ஆகிய நான்கு ஒன்றியங்களில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி என, மொத்தம் 52 பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால், மேற்கண்ட அரசு பள்ளிகளில், குடிநீர், கழிப்பறை மற்றும் கட்டடம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடியவில்லை.