டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள்... விராட் கோலியின் சாதனையை சமன் செய்த தென் ஆப்பிரிக்க வீரர்
பார்படாஸ்,டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்களில் விராட் கோலியின் சாதனையை தென் ஆப்பிரிக்க வீரர் குயிண்டன் டி காக் சமன் செய்துள்ளார். சதம் விளாசி சாதன
கரீபியன் பிரீமியர் லீக் (CPL) தொடரில் பார்படாஸ் டிரைடென்ட்ஸ் அணிக்காக விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க வீரர் குயிண்டன் டி காக். இவர் செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக சதம் விளாசி சாதனை படைத்தார்.
அப்போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கிய டி காக், 11 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்களுடன் 57 பந்துகளில் 106 ரன்கள் குவித்தார். இதன் காரணமாக பார்படாஸ் டிரைடென்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 217 ரன்களை பதிவு செய்தது.
இப்போட்டியில் பார்படாஸ் அணி எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், ஜேசன் ஹோல்டர் தலைமையிலான செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி, 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. அந்த அணியின் ஜான்சன் சார்லஸ் 78 ரன்கள் விளாசினார். ஆண்ட்ரே பிளெட்சர் 8 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 22 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.


