டெல்லி புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; ஜெய்ப்பூரில் தரையிறக்கம்
ஜெய்ப்பூர்,மத்தியபிரதேசத்தில் இருந்து டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஜெய்ப்பூரில் தரையிறக்கப்பட்டது.மத்தியபிரதேச மாநிலம் போபாலில் இருந்து தலைநகர் டெல்லிக்
மத்தியபிரதேசத்தில் இருந்து டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஜெய்ப்பூரில் தரையிறக்கப்பட்டது.
மத்தியபிரதேச மாநிலம் போபாலில் இருந்து தலைநகர் டெல்லிக்கு இன்று காலை 8.45 மணிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 140 பேர் பயணம் செய்தனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் வான்பரப்பில் நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தது. அப்போது விமானத்தில் திடீரென தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டது. இதனால் துரிதமாக செயல்பட்ட விமானி உடனடியாக விமானத்தை ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கினார்.


