காரைக்குடி நுாறடி ரோட்டில் பள்ளம் : வாகன ஓட்டிகள் அவதி
காரைக்குடி, செப். 7-– காரைக்குடி புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் 100 அடி ரோட்டில் மெகா பள்ளமாக இருப்பதால், வாகன
காரைக்குடி புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் 100 அடி ரோட்டில் மெகா பள்ளமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
காரைக்குடி மாநகராட்சியில் பெரியார் சிலை, 100 அடி ரோடு, புது பஸ் ஸ்டாண்ட், ரயில்வே பீடர் ரோடுகள் உள்ளன. இந்த ரோட்டில் பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. மழை நீர் செல்ல கால்வாய் வசதியின்றி ரோட்டின் இருபுறமும் தேங்கி ரோட்டை சேதப்படுத்துகிறது.
குறிப்பாக அதிக போக்குவரத்து உள்ள ரயில்வே பீடர் ரோடு, நுாறடி ரோட்டில் குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கி விபத்திற்கு உள்ளாகாமல் இருக்க, தடுப்புகளை வைத்துள்ளனர். மாநகராட்சி நிர்வாகம் இந்த ரோடுகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
