நல்லாசிரியர் விருது பெற்றவருக்கு பாராட்டு
பாப்பிரெட்டிப்பட்டி:பொம்மிடி அடுத்த ஜாலிப்புதுார் அரசு மேல்நிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் கோபால், 48. இவருக்கு தமிழக அரசு மாநில நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்தது.
அவரை ஊர்மக்கள், ஆசிரியர்கள் பெற்றோர் வரவேற்று மேள தாளங்களுடன் ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வந்தனர். தலைமை ஆசிரியர் கதிரவன் தலைமையில் பாராட்டு விழா நடந்தது.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் அகிலாண்டேஸ்வரி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியை சாந்தி வரவேற்றார். விழாவில் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், கல்வியாளர்கள், பொதுமக்கள், பி.டி.ஏ., நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழுவினர் கலந்து கொண்டனர். பட்டதாரி ஆசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.