நிலவை ஆராய விண்கலம் - அடுத்த ஆண்டு அனுப்புகிறது துருக்கி..!
துருக்கி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிலவை ஆய்வு செய்யும் விண்கலத்தை செலுத்த உள்ளதாக தொழில்துறை அமைச்சர் மெஹ்மது காசிர் தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களில் நிலவின் சுற்றுப்பாதையை அடையும் விண்கலம், 100 கி.மீ. உயரத்தில் 3 மாதங்கள் முதல் 1.5 ஆண்டுகள் வரை ஆய்வுகளை மேற்கொள்ளும்.
நிலவை ஆராய்வதற்கான விண்கலத்தை அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் செலுத்த உள்ளதாக துருக்கி தொழில்துறை அமைச்சர் மெஹ்மது காசிர் தெரிவித்தார்.
இரண்டு மாதங்களில் விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையை அடையும் என்றும் மூன்று மாதங்கள் முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை நிலவிலிருந்து 100 கிலோமீட்டர் உயரத்தில் இருந்தபடி நிலவைச் சுற்றிவந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, நிலவின் மேற்பரப்புடன் சூரியக்காற்றின் எதிர்வினை, நிலவின் காந்தப் புலங்கள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

