செல்போன் செயலி மூலம் பண மோசடி: மேலூரை சேர்ந்த மேலும் ஒரு பெண் சரண்
மதுரை, செல்போன் செயலி மூலம் கோடிக்கணக்கில் பண மோசடி நடந்த விவகாரத்தில், மேலூரை சேர்ந்த மேலும் ஒரு பெண் கைது செய்யப்பட்டார். பணம் வசூலித்து மோசடிமதுரை மாவட்டம் ம
செல்போன் செயலி மூலம் கோடிக்கணக்கில் பண மோசடி நடந்த விவகாரத்தில், மேலூரை சேர்ந்த மேலும் ஒரு பெண் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் மேலூரில் எப்.கியூ.எல். என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனத்தின் செயலி மூலம் ஆன்லைனில் முதலீடு செய்தால், 2 மாதங்களில் பணம் இரட்டிப்பாகும் என்று கூறப்பட்டது. அதோடு பொதுமக்களிடம் இருந்து முதலீடு பெறுவதற்கு முகவர்களும் நியமிக்கப்பட்டனர். இந்த முகவர்கள், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம மக்களை குறிவைத்து, மூளைச்சலவை செய்து, நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்தனர். அதோடு ஒரு சிலருக்கு, முதலீட்டு தொகை இரட்டிப்பாக கிடைத்தது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் தலா ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை முதலீடு செய்தனர்.
இந்தநிலையில், அந்த தனியார் நிறுவனம் திடீரென மூடப்பட்டது. இதனால், பணத்தை முதலீடு செய்த மக்கள், முகவர்களின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட மக்கள் மேலூரில் உள்ள திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



