உருகுவே அணி அறிவிப்பு: இந்திய நட்பு கால்பந்தில் பங்கேற்க
கொல்கட்டா: இந்தியாவுக்கு எதிரான நட்பு கால்பந்தில் பங்கேற்கும் உருகுவே அணி அறிவிக்கப்பட்டது.
இந்திய கால்பந்து அணி, மூன்று நட்பு போட்டிகளில் விளையாட உள்ளது. இதன் படி 138 வது இடத்தில் உள்ள இந்திய அணி, சமீபத்தில் உலக கோப்பை தொடரில் பங்கேற்ற பனாமா, பிரேசில், உருகுவே என மூன்று அணிகளுடன் மோத தயாராகி வருகிறது.
வரும் 25ல் நடக்க உள்ள முதல் போட்டியில் இந்திய அணி, 44 வது இடத்தில் உள்ள பனாமாவுடன் மோத உள்ளது. இப்போட்டி பெங்களூரு கன்டீவ்ரா மைதானத்தில் நடக்கும்.

