அணித் தேர்வில் தவறு நடப்பது உண்மை தான்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர்
லண்டன், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முதல் இரு டெஸ்டுகளிலும் படுதோல்வி அடைந்தது. ஒரு இன்னிங்சில் கூட 200 ரன்க
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முதல் இரு டெஸ்டுகளிலும் படுதோல்வி அடைந்தது. ஒரு இன்னிங்சில் கூட 200 ரன்களை தொடவில்லை. மோசமான தோல்வி எதிரொலியாக முகமது ரிஸ்வான், சல்மான் அலி ஆஹா, இமாம் உல்-ஹக் உள்பட 7 வீரர்கள் 3-வது டெஸ்டுக்கு முன்பாக தடாலடியாக நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். பயிற்சியாளர் சர்ப்ராஸ் அகமதுவும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த நடவடிக்கையை முன்னாள் கேப்டன்கள் ரமீஷ் ராஜா, ரஷீத் லத்தீப், சாஹித் அப்ரிடி உள்ளிட்டோர் கடுமையாக குறை கூறினர். ஒரு தொடரின் பாதியில் வீரர்களை நீக்குவது சரியானது அல்ல. இது வீரர்களின் மனஉறுதியை சீர்குலைக்கும் என்று அவர் கள் சாடினர்.
இந்த நிலையில் இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொசின் நக்வி முதல் முறையாக விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
