பேரனுக்கு தொந்தரவு சில்மிஷ பாட்டிக்கு சிறை
ஈரோடு: ஈரோடில், 12 வயது பேரனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த, 46 வயது பாட்டியை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம், லக்காபுரத்தைச் சேர்ந்த, 46 வயது பெண்ணுக்கு, மகள் வழியில் 12 வயது பேரன் உள்ளார். எட்டாம் வகுப்பு படிக்கும் அச்சிறுவனை, அவரது பெற்றோர் வெளியூர் செல்லும் போதும், பள்ளி விடுமுறை நாட்களிலும், பாட்டி வீட்டில் விட்டு செல்வது வழக்கம்.
இரு தினங்களுக்கு முன், வழக்கம் போல் பாட்டி வீட்டுக்கு செல்லுமாறு பெற்றோர் கூறிய போது, சிறுவன் மறுத்து அழுதுள்ளார். விபரம் கேட்டபோது, இரு ஆண்டுகளாக பாலியல் ரீதியாக பாட்டி துன்புறுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.