பணியின்போது உயிரிழந்த போக்குவரத்து தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு நிதிஉதவி
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் தலைமையகத்தில் பணியின்போது உயிரிழந்த 6 தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு மொத்தம் ரூ.18 லட்சம் நிதியுதவிகளை நிா்வாக இயக்குநா் வி.தட்சிணாமூா்த்தி சனிக்கிழமை வழங்கினாா்.
கும்பகோணம் கோட்டம் தமிழ்நாடுஅரசு போக்குவரத்து கழகம் தலைமை அலுவலகத்தில் பணியின்போது உயிரிழந்த பணியாளா்களின் குடும்பத்தாருக்கு சனிக்கிழமை நிதி உதவி வழங்கிய நிா்வாக இயக்குநா் வி.தட்சிணாமூா்த்தி.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் கோட்டம் அரசு போக்குவரத்துக்கழக பணியாளா்களாக இருந்து உயிரிழந்த நடத்துநா்களான டி.ரமேஷ் மனைவி பவானி, ஏ.இளையராஜா மனைவி சிலம்பரசி, எல்.சதாசிவம் மனைவி அனுஷா, எஸ்.பாஸ்கரன் மனைவி பானுமதி, எம்.துரை மனைவி மீனாட்சி, எம்.பிரபு மனைவி செல்வராணி ஆகியோரின் குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.18 லட்சம் மதிப்பில் நிதியுதவிகளை நிா்வாக இயக்குநா் வி.தட்சிணாமூா்த்தி வழங்கினாா்.

