புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு தண்ணீா் திறக்க கோரி! அமராவதி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்!
அமராவதி அணை முன் ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு தண்ணீா் திறந்துவிட வலியுறுத்தி உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணைக்கு முன் உள்ள ஆற்றில் இறங்கி விவசாயிகள் திங்கள்கிழமை போரா ட்டம் நடத்தினா்.
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணை மூலமாக திருப்பூா், கரூா் மாவட்டங்களில் சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் விளங்குகிறது.


