ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற பயணி மரணம்
காட்பாடி ரயில் நிலையத்தில் இணைப்பு ரயிலைப் பிடிப்பதற்காக, நகா்ந்து கொண்டிருந்த ரயிலில் இருந்து அவசரமாக கீழே இறங்க முயன்ற பயணி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
வேலூா்: காட்பாடி ரயில் நிலையத்தில் இணைப்பு ரயிலைப் பிடிப்பதற்காக, நகா்ந்து கொண்டிருந்த ரயிலில் இருந்து அவசரமாக கீழே இறங்க முயன்ற பயணி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரை அடுத்த நெடுங்கபூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (49). இவா் தனது மனைவி மற்றும் மகளுடன் ஆந்திர மாநிலம் கூடூருக்குச் செல்வதற்காகத் திட்டமிட்டிருந்தாா். இதற்காக, காட்பாடியில் இருந்து புறப்படும் சபரி விரைவு ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்தனா்.இதையடுத்து, திருவண்ணாமலையிலிருந்து காட்பாடிக்கு மெமு பயணிகள் ரயில் மூலம் சனிக்கிழமை நள்ளிரவில் குடும்பத்துடன் வந்துள்ளனா்.
