“5 ஸ்டார் தரம் இல்லையா?” – இந்தியாவை விட்டு வெளியேறிய Miss Grand International: என்ன நடந்தது?
போட்டியாளர்களுக்கான ஐந்து நட்சத்திர தரத்திலான விருந்தோம்பல் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பு ஏற்பாடுகள் வழங்கப்பட வேண்டும் என்பது ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருந்ததாக MGI தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நடைபெற இருந்த Miss Grand International 2026 போட்டி திடீரென தாய்லாந்துக்கு மாற்றப்பட்டிருப்பது சர்வதேச அழகிப் போட்டி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போட்டி நடத்தும் நாட்டை மாற்றும் அளவுக்கு என்ன நடந்தது என்பதுதான் தற்போது எழுந்துள்ள கேள்வி.
Miss Grand International அமைப்பு செப்டம்பர் 3-ம் தேதி வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பில், இந்தியாவில் நடைபெற இருந்த Miss Grand International 2026 தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்திவிட்டு, மீதமுள்ள நிகழ்ச்சிகளை தாய்லாந்துக்கு மாற்றுவதாக தெரிவித்தது. இதற்குக் காரணமாக, போட்டியை நடத்துவதற்காக ஒப்புக்கொள்ளப்பட்ட ஒப்பந்த நிபந்தனைகள் மற்றும் தரநிலைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என அமைப்பு கூறியுள்ளது.


