விதைப் பண்ணைகளில் நர்சரி ஏற்படுத்த உத்தரவு
கம்பம், செப். 17 வேளாண் விதைப் பண்ணைகளில் மரக்கன்றுகள் வளர்க்க நர்சரி அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மரம்
வேளாண் விதைப் பண்ணைகளில் மரக்கன்றுகள் வளர்க்க நர்சரி அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
மரம் வளர்ப்பில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாநிலம் முழுவதும் வேளாண் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 23 விதைப் பண்ணைகள் உள்ளன. இப் பண்ணைகளில் மரக்கன்றுகள், மூலிகை நாற்றுகள் வளர்க்க உத்தரவிட்டுள்ளது. கூடலூரில் வேளாண் துறை விதைப் பண்ணை உள்ளது. 47.86 ஏக்கரை கொண்ட இப்பண்ணையில் 41 ஏக்கரில் சாகுபடி நடைபெறுகிறது.
அதிக பரப்பளவு கொண்ட பண்ணைகளில் 2.5 ஏக்கரிலும், குறைவான பரப்பளவு கொண்ட பண்ணைகளில் 1.5 ஏக்கரிலும் நர்சரி அமைக்கும் நடவடிக்கைகள் துவங்கி உள்ளது. பண்ணை நர்சரிகளில் வளர்க்கப்படும் மரக் கன்றுகள், மூலிகை நாற்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாகவும் அல்லது மானிய விலையிலும் வழங்கப்பட உள்ளது என்று வேளாண் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
