பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு அவகாசம் நீட்டிப்பு
ஆவடி: ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 2011ம் ஆண்டுக்கு முன் பிறந்தவர்கள், பிறப்பு பதிவு செய்து பெயர் பதியாமல் உள்ளனர். அவர்கள், பிறப்பு சான்றிதழில் தங்கள் பெயர்களை சேர்ப்பதற்கு செப்., 26ம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து, ஆவடி மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
குழந்தை பிறந்து 21 நாட்களுக்குள் பெயரை பதிவு செய்ய வேண்டும். அதற்கு மேல் பதிவு செய்யப்படும் பிறப்பு, இறப்பு பதிவுக்கு 100 அபராதம் செலுத்த வேண்டும். 30 நாட்களுக்கு மேல் பதிவு செய்யப்படும் பதிவிற்கு 200 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.