‘அரபிக் கடலின் ராணி’... கொச்சியின் புகழுக்கு பின்னால் இருக்கும் வரலாறு என்ன?
கொச்சிஇந்தியாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள கொச்சி, வரலாற்றுச் சிறப்புமிக்க துறைமுக நகரமாகும். கொச்சியின் புவியியல் அமைப்பு இயற்கையாக பாதுகாக்கப்பட்ட நீர்
இந்தியாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள கொச்சி, வரலாற்றுச் சிறப்புமிக்க துறைமுக நகரமாகும். கொச்சியின் புவியியல் அமைப்பு இயற்கையாக பாதுகாக்கப்பட்ட நீர்ப்பகுதிகளை கொண்டது என்பதால் இயற்கையாகவே அமைந்த துறைமுகம் என்ற சிறப்பு இதற்கு உண்டு.
கேரள மாநிலத்தில் விளைவிக்கும் மசாலா பொருட்களை கையாளும் சர்வதேச வர்த்தக மையமாகவும் விளங்குகிறது. அவைகளை பல்வேறு நாடுகளுக்கு எளிதாக கொண்டு சேர்க்கும் சர்வதேச கடல் வர்த்தக பாதைகளுடன் இணைந்திருந்தது. வரலாற்றுக் கட்டிடங்கள் மற்றும் பன்முக கலாசார வாழ்க்கை சூழலுடன் பல நூற்றாண்டுகளாக பின்னிப்பிணைந்த கடல் வர்த்தகத்தின் நினைவுகளைப் பாதுகாத்து வருவதால் "அரபிக் கடலின் ராணி" என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது.
14-ம் நூற்றாண்டில் கொடுங்கல்லூர் துறைமுகம் தான் வர்த்தகத்தை கையாளுவதில் முதன்மை இடத்தில் இருந்தது. 1341-ல் ஏற்பட்ட கனமழை, பெருவெள்ளத்தால் அந்த துறைமுகம் பாதிக்கப்பட்டது. அதன் பிறகே கொச்சியின் முக்கியத்துவம் அதிகரிக்க தொடங்கியதாக வரலாற்று பதிவுகள் குறிப்பிடுகின்றன. மிளகு, ஏலக்காய், இலவங்கப்பட்டை போன்ற மசாலாப்பொருட்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய மையமாக கொச்சி துறைமுகம் வளர்ந்தது. குறிப்பாக இந்தியா, சீனா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் கடல் வழி வர்த்தகம் நடைபெற தொடங்கியது.
