கர்நாடகம் தண்ணீர் வழங்க வாய்ப்பில்லை: சம்பா சாகுபடிக்கு முழுமையாக நீர் வழங்க அரசு தெளிவுபடுத்த வேண்டும் - அன்புமணி
சென்னை,கர்நாடகம் தண்ணீர் வழங்க வாய்ப்பில்லை: சம்பா சாகுபடிக்கு முழுமையாக நீர் வழங்க முடியுமா? அரசு தெளிவுபடுத்த வேண்டும்! என்று அன்புமணி தெரிவித்தார். இது தொடர்
கர்நாடகம் தண்ணீர் வழங்க வாய்ப்பில்லை: சம்பா சாகுபடிக்கு முழுமையாக நீர் வழங்க முடியுமா? அரசு தெளிவுபடுத்த வேண்டும்! என்று அன்புமணி தெரிவித்தார். இது தொடர்பாக, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;-
கர்நாடக அணைகளில் தொடங்கி, கல்லணை வரை காவிரி நீர் தொடர்பாக வரும் செய்திகள் எதுவுமே நம்பிக்கையளிப்பதாக இல்லை. கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வருவதற்கும், கல்லணையில் திறக்கப்படும் நீர் கடைமடை பாசனப் பகுதிகளை சென்றடைவதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையில், காவிரி டெல்டா விவசாயிகள் சம்பா சாகுபடியை தொடங்கலாமா? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை நெற்பயிர்களை காப்பாற்றவும், சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்கு உழவர்கள் தயாராகவும் வசதியாக மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஒன்றாம் தேதி முதல் காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. காவிரி நீர் கல்லணையை நேற்று வந்தடைந்த நிலையில், இன்று முதல் அங்கிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூரிலிருந்து வினாடிக்கு 7000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், கல்லணைக்கு சராசரியாக வினாடிக்கு 2500 கனஅடி நீர் மட்டுமே வருகிறது. இதை கொண்டு கல்லணையிலிருந்து காவிரி மற்றும் அதன் கிளை நதிகளில் எவ்வளவு கன அடி நீர் திறந்து விடப்படும் என்பது தெரியவில்லை.



