"யாராக இருந்தாலும் தப்ப முடியாது" - லஞ்சம் குறித்து அமைச்சர் கீர்த்தனா எச்சரிக்கை
லஞ்சம் வாங்கினாலும், தவறு செய்தாலும் யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி என தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார். |Minister Keerthana warned that action will be taken against anyone involved in bribery or wrongdoing and urged people to report corruption.
மாற்றுத்திறனாளி வெளியிட்ட வீடியோவைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.
விருதுநகர் வேம்பக்கோட்டையில் மாற்றுத்திறனாளி ஒருவர் பட்டாசுக் கடை வைக்க தடையில்லாச் சான்றிதழுக்கு விண்ணப்பித்திருக்கிறார்.
அவரிடம் லஞ்சம் கேட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை வீடியோ எடுத்துச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார் அவர்.

