கொசுப்புழு உற்பத்தி ரூ.1.27 லட்சம் அபராதம் விதிப்பு
ஆவடி: ஆவடி மாநகராட்சியில், கொசுப்புழுக்கள் உற்பத்தி செய்த 80 வீடுகள், ஐந்து தனியார் நிறுவனங்களுக்கு 1.27 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆவடி மாநகராட்சியில், ‘டெங்கு’ காய்ச்சல் பரவலை தடுக்க கொசுப்புழு ஒழிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்தாண்டில் இதுவரை நடந்த சோதனையில், கொசுப்புழு உற்பத்திக்கு காரணமான 80 வீடுகள் மற்றும் ஐந்து தனியார் நிறுவனங்களுக்கு, மொத்தம் 1.27 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல் அறிகுறி தென்பட்டால், அருகில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.