மீண்டும் பின்னடைவில் அமெரிக்கா? வான் படைகளை வேட்டையாடும் ஈரான்!
செய்தியாளர் - M.மீரா ஈரானுடனான தற்போதைய போரில், உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவின் ராணுவத்திற்கு எதிர்பாராத மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாக
ஈரானுடனான தற்போதைய போரில், உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவின் ராணுவத்திற்கு எதிர்பாராத மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பெருமையாகக் கருதப்படும் அதிநவீன 'MQ-9 ரீப்பர்' (MQ-9 Reaper) ட்ரோன்களில் குறைந்தது 45 ஆளில்லா விமானங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாகவோ அல்லது செயலிழந்து போயுள்ளதாகவோ ராணுவத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த ஒட்டுமொத்த இழப்பின் மதிப்பு சுமார் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாகும் எனவும், மேலும், இது அமெரிக்க ட்ரோன் படையின் செயல்பாட்டுத் திறனில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பொது பட்ஜெட் மற்றும் பாதுகாப்புத்துறைத் தரவுகளின்படி, இந்தப் போருக்கு முன்பு அமெரிக்காவிடம் சுமார் 185 MQ-9 ரீப்பர் ட்ரோன்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்ததாகவும், இவற்றில் சுமார் 165 ட்ரோன்களை அமெரிக்க விமானப்படையும், மீதமுள்ளவற்றை கடற்படையும் இயக்கி வந்ததாகவும், ஆனால், இந்தத் தொடர்ச்சியான இழப்புகளுக்குப் பிறகு, தற்போது செயல்பாட்டில் உள்ள ட்ரோன்களின் எண்ணிக்கை 135 ஆகக் குறைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
