மதுவுக்கு அடிமை: மனைவி பிரிந்து சென்ற வேதனையில்.. காவலாளி எடுத்த விபரீத முடிவு
நாகர்கோவில்,வள்ளியூர் அருகே மனைவி பிரிந்து சென்ற வேதனையில் ரெயில் முன்பாய்ந்து காவலாளி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தீவிர சிகிச்சைநெல்லை மாவட்ட
வள்ளியூர் அருகே மனைவி பிரிந்து சென்ற வேதனையில் ரெயில் முன்பாய்ந்து காவலாளி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் நேற்றுமுன்தினம் காலையில் ஒரு வாலிபர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த நாகர்கோவில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு உயிருக்கு போராடிய வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.


