சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
சென்னை,பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-தேசிய அளவில் நடத்தப்படும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில், ஓபிசி எனப்படும
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தேசிய அளவில் நடத்தப்படும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில், ஓபிசி எனப்படும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சாதி மக்களின் எண்ணிக்கையை கணக்கிட மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளால் கடைபிடிக்கப்படும் ஓபிசி சாதிகள் பட்டியலை இணைத்து பயன்படுத்துவது குறித்து ஆராயப்பட்டதாகவும், ஆனால், அந்தப் பட்டியலில் இருப்பவை வகுப்புகள் தானே தவிர, சாதிகள் இல்லை என்பதால் அந்த முடிவு கைவிடப்பட்டதாகவும் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது மத்திய அரசின் நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதற்கான கூறப்படும் பலவீனமான காரணம் தானே தவிர ஏற்றுக்கொள்ளத்தக்க வாதம் அல்ல.
இந்தியாவில் கடைசியாக 1931-ஆம் ஆண்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட சமூகநீதி அமைப்புகளின் வலியுறுத்தல் காரணமாக 95 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இப்போது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக நாடு முழுவதும் வீட்டுப் பட்டியல் தயாரிப்புப் பணிகள் நிறைவடைந்து விட்ட நிலையில், இமயமலையை ஒட்டிய மாநிலங்களில் சாதி விவரத்துடன் மக்கள்தொகையை கணக்கெடுக்கும் பணி கடந்த ஒன்றாம் தேதி தொடங்கியுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் வரும் பிப்ரவரி மாதத்தில் இப்பணி தொடங்கவுள்ளது.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
