102 வயது மூதாட்டியின் சாதனை: புதிதாக கட்டப்பட்ட சர்வதேச பாலத்தை நடந்து கடந்து பிறந்தநாள் கொண்டாட்டம்
ஒட்டாவா,கனடா நாட்டைச் சேர்ந்த 102 வயது மூதாட்டி ஒருவர், தனது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக கனடா மற்றும் அமெரிக்காவை இணைக்கும் புதிய சர்வதேச பாலத்தை நடந்து கடந்
கனடா நாட்டைச் சேர்ந்த 102 வயது மூதாட்டி ஒருவர், தனது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக கனடா மற்றும் அமெரிக்காவை இணைக்கும் புதிய சர்வதேச பாலத்தை நடந்து கடந்து தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியுள்ளார். இந்த நெகிழ்ச்சியான மற்றும் ஊக்கமளிக்கும் செய்தி தற்போது சமூக வலைதளங்களில் உலக அளவில் வைரலாகி வருகிறது.
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள வின்ட்சர் நகரத்தைச் சேர்ந்த மூதாட்டி ரீட்டா ஜார்ஜெப் (வயது 102). அவர் கடந்த மாதம் 28-ந்தேதி அன்று தனது 102-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். உண்மையில், அவர் தனது 100-வது பிறந்தநாளின் போதே வின்ட்சர் மற்றும் அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரங்களை இணைக்கும் புதிய கார்டி ஹோவ் சர்வதேச பாலத்தில் நடக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார்.
ஆனால், பாலத்தின் கட்டுமானப் பணிகள் 2 ஆண்டுகள் தாமதமானதால், அவரது இந்த கனவு தள்ளிப்போனது. இருப்பினும், தனது இலக்கை ரீட்டா கைவிடவில்லை. இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி பாலத்தின் ஒரு பகுதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டதும், அவர் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அங்கு சென்றார்.

