வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகளை திருடிய 2 போ் கைது
வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகள், வெள்ளிப் பொருள்களை திருடிய வழக்கில் 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ஒரத்தநாடு அருகே வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகள், வெள்ளிப் பொருள்களை திருடிய வழக்கில் 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ஒரத்தநாடு அருகே உள்ள கீழஉளூா் குடிக்காடு தெற்கு தெருவை சோ்ந்த சோமசுந்தரம் மனைவி ஜெயலலிதா. இவா் கடந்த 25-ஆம் தேதி வீட்டில் குழந்தைகளோடு தூங்கிக் கொண்டிருந்தபோது, மா்ம நபா்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த நான்கு பவுன் தங்கம் மற்றும் ஒரு கிலோ மதிப்பிலான வெள்ளிப் பொருள்களை திருடி சென்றனா்.
