அராபத் ஏரியை பாதுகாக்க ஏரி நடை விழிப்புணர்வு: 500 பேர் பங்கேற்பு
ஆவடி: புழல், அராபத் ஏரியை பாதுகாக்க வலியுறுத்தி, 'ஏரி நடை' என்ற விழிப்புணர்வு நடைபயணத்தில் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உட்பட 500 பேர் பங்கேற்றனர்.
புழல் ஏரி, அராபத் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கத்தின் சார்பில், நீர்நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி, திருமுல்லைவாயில் சி.டி.எச்., சாலையில் உள்ள அராபத் ஏரிக்கரையில், 'ஏரி நடை' எனும் விழிப்புணர்வு நடைபயணம் நேற்று காலை நடந்தது.
இதில், 500க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அராபத் ஏரியில் இருந்து வெங்கடாசலம் நகர் வரை 11 கி.மீ., நடைபயணம் சென்றனர்.