இந்தோனேசியாவில் காட்டுத் தீ... புகைமூட்டத்தால் மக்கள் கடும் பாதிப்பு!
முகக்கவசம் அணிந்திருந்த போதிலும், நச்சுப் புகையை சுவாசிப்பதால் மூச்சுத் திணறல் ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ மற்றும் அதனால் உருவாகும் புகைமூட்டத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தோனேசியாவில் மிகக் கடுமையான காட்டுத் தீ பரவி வருகிறது. இதில் இருந்து எழும் புகைமூட்டத்தால் இருமல், தொண்டை வலி மற்றும் காய்ச்சல் போன்ற சுவாசப் பிரச்னைகளால் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


