மதுராவில் பிரமாண்ட கோவில் - யோகி ஆதித்யநாத்
மதுரா,யோத்தியைப் போலவே மதுராவிலும் பிரம்மாண்ட கோவில் வளாகம் அமைக்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். கிருஷ்ண ஜெயந்தியை
யோத்தியைப் போலவே மதுராவிலும் பிரம்மாண்ட கோவில் வளாகம் அமைக்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வழிபாடு மேற்கொண்டார். பின்னர் உரையாற்றிய அவர்,
“உலகின் மிகப் பெரிய கோவில் அயோத்தியில் கட்டப்பட்டுள்ளது. அயோத்தி மற்றும் காசியில் உள்ளதைப் போன்று மதுரா மற்றும் பிருந்தாவனிலும் பிரம்மாண்டமான வளாகங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் முயற்சி.

