கட்டட அனுமதி அடிப்படையில் சொத்து வரி மதிப்பீடு: அரசு முடிவு
சென்னை: கட்டட அனுமதி அடிப்படையில், வீடு மற்றும் வணிக கட்டடங்களுக்கான சொத்து வரி மதிப்பீடு மேற்கொள்ள, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளில், சொத்து வரி வசூல் தான் பிரதான வருவாய் ஆதாரமாக உள்ளது. தமிழகத்தில் நீண்ட காலமாக சொத்து வரி உயர்த்தப்படாமல் இருந்தது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், 2022ல் சொத்து வரி உயர்த்தப்பட்டது. அதன்பின், ஆண்டுதோறும் உயர்த்த, உள்ளாட்சிகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
இதில், சில மாநகராட்சிகளில் சொத்து வரி மதிப்பீடு முறையாக நடக்கவில்லை என்றும், அதனால் வருவாய் கசிவு ஏற்படுவதாகவும், தமிழக அரசு கருதுகிறது. இதற்காக, சொத்து வரி மறுமதிப்பீடு பணிகள் முடுக்கி விடப்பட்டன.



