என் பேச்சு எடுபடாது சித்தராமையா விரக்தி
பெங்களூரு: ''நான் இப்போது முதல்வர் அல்ல. என் பேச்சு, எடுபடாது. எந்த அளவுக்கு எடுபடும் என்பது, எனக்கு மட்டுமே தெரியும்,'' என, முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூரின் விதான் சவுதாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
நான் தற்போது முதல்வர் அல்ல. என் பேச்சுக்கு இப்போதும் முக்கியத்துவம் இருக்கும் என, பலர் நினைக்கின்றனர். நானும் கூட அப்படி தான் நினைத்திருந்தேன். ஆனால் என் பேச்சு எந்த அளவுக்கு எடுபடும், எடுபடாது என்பது எனக்கு மட்டுமே தெரியும்.


