பெங்களூரில் சிறப்பு சட்டசபை கூட்டம் செப்., 21 முதல் 3 நாட்கள் நடத்த முடிவு
பெங்களூரு: மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு தொடர்பான, கஸ்துாரி ரங்கன் அறிக்கை பற்றி விரிவாக விவாதிக்க, இம்மாதம் 21ம் தேதி முதல் மூன்று நாட்கள், பெங்களூரில் சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் நடக்க உள்ளது.
பெங்களூரு விதான் சவுதாவில் முதல்வர் சிவகுமார் தலைமையில் நேற்று அமைச்சரைவை கூட்டம் நடந்தது. இங்கு எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, துணை முதல்வர் பரமேஸ்வர் அளித்த பேட்டி:
கடந்த மாதம் 13 ம் தேதி முதல் 25ம் தேதி வரை, கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் நடந்தது. வறட்சி பிரச்னை உட்பட பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதித்து இருக்க வேண்டும். ஆனால், எதிர்க்கட்சிகள் போராட்டத்தால் விவாதிக்க முடியாமல் போனது.

