சொத்தை ஆசிரமத்துக்கு எழுதி வைப்பதாக மிரட்டிய தந்தை வெட்டிக்கொலை - மகன், தாய் கைது
காஞ்சீபுரம், சொத்தை ஆசிரமத்துக்கு எழுதி வைத்து விடுவேன் என்று மிரட்டியதால் தந்தையை வெட்டிக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். உடந்தையாக இருந்த தாயும் கைது செய்
சொத்தை ஆசிரமத்துக்கு எழுதி வைத்து விடுவேன் என்று மிரட்டியதால் தந்தையை வெட்டிக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். உடந்தையாக இருந்த தாயும் கைது செய்யப்பட்டார்.
சென்னை பெருங்குடியை சேர்ந்தவர் சிவபாதம் (வயது 70). அரசு பஸ் டிரைவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ரேணுகா (50). மகன் மதுசூதனன் (39). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் தனியார் கப்பல் நிறுவனத்தில் வேலை செய்தார். மதுசூதனனுக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக பெருங்குடி பழைய மாமல்லபுரம் சாலையில் பல்வேறு இடங்களில் வீடுகள் உள்ளன.
இந்த நிலையில் மதுசூதனன் தான் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு பெருங்குடியில் உள்ள வீட்டுக்கு வந்து பெற்றோர் மற்றும் மனைவி, குழந்தையுடன் வசித்து வந்தார். வாடகைக்கு விட்ட வீடுகளில் இருந்து வந்த வடகை பணம் மூலம் மதுசூதனன் குடும்பம் நடத்தி வந்தார். இதற்கிடையே சிவபாதம் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மருத்துவம் உள்ளிட்ட செலவுகள் அதிகமானது. இந்த நிலையில் ஒரு மாதத்துக்கு முன் குடும்பத்தினருடன் தகராறு ஏற்பட்ட நிலையில் சிவபாதம், வாலாஜாபாத் அடுத்த மருதம் கிராமத்தில் உள்ள தனது வீட்டுக்கு வந்து தனியாக வசித்து வந்தார்.



