தேனி: மஞ்சளாறு அணை நீர்மட்டம் 26 அடியாக சரிவு.. விவசாயிகள் கவலை
தேனி, தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை நீர்மட்டம் 26 அடி யாக சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.மஞ்சளாறு அணைதேவதானப்பட்டி அருகே 57 அடி உயரம் கொண்ட
தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை நீர்மட்டம் 26 அடி யாக சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தேவதானப்பட்டி அருகே 57 அடி உயரம் கொண்ட மஞ்சளாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 5 ஆயிரத்து 258 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி பேரூராட்சிகள், ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் பழைய வத்தலக்குண்டு, வத்தலக்குண்டு உள்ளிட்ட பகுதிகளின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறது.
ஆண்டுதோறும் அக்டோபர் 15-ந்தேதி முதல் போக பாசனத்துக்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், கடந்த ஆண்டு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் அணை நிரம்பவில்லை. இதனால் முதல் போக பாசனத்துக்கு அணை திறக்கப்படாததால் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டது.

