முதல்முறையாக காஷ்மீரில் சர்வதேச திரைப்பட விழா!
காஷ்மீரில் தொடங்கியது முதல் சர்வதேச திரைப்பட விழா...
காஷ்மீரில் முதல்முறையாக சர்வதேச திரைப்பட விழா தொடங்கியுள்ளது.
உலக அளவில் திரைத்துறை என்னென்ன கதைகளை எப்படியெல்லாம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு திரையரங்கங்கள் மற்றும் ஓடிடிகள் மட்டும் சாட்சியாக இருப்பதில்லை. இவற்றைத்தாண்டி கருத்து சுதந்திரத்திற்கு, தணிக்கையில்லாத படங்களுக்குமான இடமாக திரைப்பட விழாக்கள் இருக்கின்றன.
பெர்லின், ரோட்டர்டம் உள்பட பிரபலமான திரைவிழாக்கள் இருந்தாலும் ஒவ்வொரு நாடும் பண்பாடு மற்றும் கலை வளர்ச்சித்துறை சார்பாக சிறிய அளவில் சர்வதேச திரைப்பட விழாக்களை நடத்துகின்றனர். கோவாவில் ஆண்டுதோறும் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா இந்தியாவின் முதன்மையான திரைவிழாவாகப் பார்க்கப்படுகிறது.



