'அமைச்சரவையின் முதல் விக்கெட்... பதைபதைப்பில் 'கில்லி' சரத்? - அதிரடிக்கு தயாராகும் முதல்வர்?
அமைச்சரவையில் இடம் என்பது மிகப்பெரிய பொறுப்பு. சூதானமாக நடந்து கொள்ளாமல் முதல்வருக்கு தொடர்ந்து சங்கடத்தை கொடுப்பதால் அமைச்சரவையின் முதல் விக்கெட்டே கில்லி சரத்தாக இருக்க அத்தனை வாய்ப்புகளும் இருப்பதாக அறுதியிட்டு கூறுகின்றனர் பனையூர் வட்டாரத்தினர்.
கிரிக்கெட் மைதானத்தில் மாத்திரை நுணுக்கியது தொடங்கி தாம்பரம் மாநகராட்சி டெண்டர் ஊழல் வரைக்கும் தொடர் சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார் அமைச்சர் கில்லி சரத். 'அமைச்சர் போதைப் பொருள் பயன்படுத்தினாரா?' என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய போதே 'கில்லி' சரத் மீது முதல்வர் கடும் அப்செட் என்கின்றனர் தவெகவின் சீனியர்கள்.
அப்படியிருக்க சமீபத்தில் வெளியாகியிருக்கும் தாம்பரம் மாநகராட்சி ஊழல் அவரை இன்னும் 'Danger Zone' க்கு தள்ளியிருக்கிறது. தவெக அரசின் அமைச்சரவையின் முதல் விக்கெட்டே 'கில்லி' சரத் ஆக கூட இருக்கலாம் என்கின்றனர் கோட்டை வட்டாரத்தினர்.

