கேரளாவில் 1 வயது குழந்தை உடலில் ஊசி: டாக்டர்களின் அலட்சியம் என பெற்றோர் புகார்
கோட்டயம்: கேரளாவில், ஒரு வயது குழந்தையின் விலா எலும்பு பகுதியில் ஊசி ஒன்று கண்டெடுக்கப்பட்ட நிலையில், டாக்டர்களின் கவனக்குறைவால் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
கேரளாவின் கோட்டயம் அருகே உள்ள சாத்தமங்கலத்தைச் சேர்ந்த வினீஷ் - அஞ்சு தம்பதி. இவர்களுக்கு கோட்டயம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், கடந்தாண்டு ஜூலையில் பெண் குழந்தை பிறந்தது.
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டதை அடுத்து, அந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சில மாதங்கள் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. வீடு திரும்பியது முதல், குழந்தை அழுதபடியே இருந்தது. அதன் வலது விலா எலும்பு பகுதிக்கு அருகே வீக்கம் இருப்பதை கவனித்த பெற்றோர், அதை டாக்டர்களிடம் காண்பித்தனர்.


