ஜம்மு காஷ்மீரில் கடும் துப்பாக்கிச்சண்டை; பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் ராணுவ வீரர்கள்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் யூஸ்மார்க் பகுதிக்குட்பட்ட பிர்பஞ்சால் மலைப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அந்தப் பகுதியை பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது, இருதரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது.
வெளிநாட்டைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இருவர் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அவர்களை வேட்டையாடும் பணியில் ராணுவ வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.



