தெலுங்கானா: பண்ணையில் 10 ஏக்கரில் ரூ.1.5 கோடி மதிப்பிலான கஞ்சா செடிகள் வளர்ப்பு; தந்தை-மகன் கைது
ஐதராபாத்தெலுங்கானா பண்ணையில் 10 ஏக்கரில் ரூ.1.5 கோடி மதிப்பிலான கஞ்சா செடிகளை வளர்த்த தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர். பருத்தி வயல்தெலுங்கானாவின் நகோல்கொண்டா கிர
தெலுங்கானா பண்ணையில் 10 ஏக்கரில் ரூ.1.5 கோடி மதிப்பிலான கஞ்சா செடிகளை வளர்த்த தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.
தெலுங்கானாவின் நகோல்கொண்டா கிராமத்தில், மராட்டியம் மற்றும் சத்தீஷ்கார் எல்லையையொட்டி ஆசிபாபாத் பகுதியில் ஜெய்னூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பண்ணையில் 10 ஏக்கரில் பருத்தி வயல் ஒன்று அமைந்து உள்ளது. இந்த நிலையில், அதில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டு வளர்க்கப்பட்டு வந்துள்ளன.
இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, பாட்னாபூர் சாலையில் வாகன சோதனையின்போது, ஆம்புரே புந்தலிக் (வயது 50) என்பவரிடம் விசாரித்தனர்.

