கள்ள சாராயம் குடித்து நைஜீரியாவில் 48 பேர் பலி
அபுஜா: நைஜீரியாவில், கள்ள சாராயம் அருந்திய 48 பேர் பலியாகினர். மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் ஒண்டோ
அபுஜா: நைஜீரியாவில், கள்ள சாராயம் அருந்திய 48 பேர் பலியாகினர்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் ஒண்டோ மாகாணத்தின் ஒடிக்போ மற்றும் இரெலே ஆகிய உள்ளாட்சி பகுதிகளில் மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்த 182 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில், 48 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
