தொலைநோக்கு இல்லம் புதுப்பிக்கும் பணி தீவிரம்
சேந்தமங்கலம்; நாமக்கல் மாவட்டத்தில், இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. 70 கொண்டை ஊசி வளைவு-களை கடந்து சென்ற பின், முதலில் வருவது சோளக்காடு கிராமம் ஆகும். சோளக்காடு பஸ் ஸ்டாப் அருகே, நெடுஞ்சாலைத்துறை மூலம் பயணியர் மாளிகை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியில், கடந்த, 1987ல் தொலை-நோக்கு இல்லம் ஒன்று அமைக்கப்பட்டது.
தற்போது, கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள், அங்குள்ள தொலைநோக்கு இல்லத்-திற்கு சென்று தொலைநோக்கு கருவி மூலம் அடிவார பகுதியில் உள்ள நைனாமலை, பேளுக்-குறிச்சி, சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளை கண்டு ரசித்து வந்தனர். காலப்போக்கில் இந்த தொலைநோக்கி கருவி இல்லம் சேதமடைந்து காணப்பட்டதால், சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது. இதனால், 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தொலைநோக்கு இல்லம் சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்-நிலையில், மலைவாழ் மக்கள், இந்த இல்லத்தை புதுப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, சுற்றுலா நிதி, 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த தொலைநோக்கு இல்லம் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. அதன்படி, அங்கு புதிதாக தொலைநோக்கு கருவி மற்றும் 200 மீட்டர் அகலம் கொண்ட நடைபாதை, அதற்கு மேற்கூரை அமைக்கும் பணி நடந்து வருகிறது. பணிகளை, பி.டி.ஓ., ஈஸ்வரன் பார்வையிட்டார்.
