தமிழகத்தில் தினமும் 2,000 சைபர் குற்றங்கள் உயர் நீதிமன்றத்தில் தகவல்
மதுரை: சைபர் கிரைம்களை தடுக்க நடவடிக்கை கோரிய வழக்கில், 'தமிழகத்திலிருந்து மட்டும் தினமும், 2,000 புகார் அழைப்புகள் '1930' உதவி எண்ணிற்கு வருகின்றன' என, அரசு தரப்பில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவிக்கப்பட்டது.
சைபர் குற்றங்களை கையாள விதிமுறைகளை வகுக்க, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி, திருச்சி, வகுல கிரி தாக்கல் செய்த பொதுநல மனுவை, நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது.
இந்த வழக்கில், காணொலி மூலம் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ராஜேஷ் குமார் மற்றும் தொலைத்தொடர்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் 11 அதிகாரிகள் ஆஜராகி, தெரிவித்ததாவது:



