'வெண்ணிலா கபடி குழு' பாணியில் போட்டி: 16 புரோட்டாக்கள் சாப்பிட்டவருக்கு ரூ.6 ஆயிரம் பரிசு
காரைக்குடி,காரைக்குடியில் நடைபெற்ற புரோட்டா சாப்பிடும் போட்டியில் 16 புரோட்டாக்கள் சாப்பிட்டவர் வெற்றி பெற்றார். புரோட்டா சாப்பிடும் போட்டி'வெண்ணிலா கபடி குழு'
காரைக்குடியில் நடைபெற்ற புரோட்டா சாப்பிடும் போட்டியில் 16 புரோட்டாக்கள் சாப்பிட்டவர் வெற்றி பெற்றார்.
'வெண்ணிலா கபடி குழு' படத்தில் ஒரு கடையில் 50 புரோட்டா சாப்பிடும் போட்டியில் நடிகர் சூரி பங்கேற்று சாப்பிடுவது போன்ற காமெடி காட்சி பிரபலம். அதை நினைவுப்படுத்தும் வகையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட இந்து முன்னணி சார்பில் காரைக்குடி நூறடி ரோட்டில் உள்ள ஒரு கடையில் புரோட்டா சாப்பிடும் போட்டி நடைபெற்றது.
இதில் 2 சிறுவர்கள் உள்பட 8 பேர் கலந்து கொண்டு போட்டிபோட்டு சாப்பிட்டனர். இந்த போட்டியில் காரைக்குடியை சேர்ந்த சேகர் என்பவர் அதிகபட்சமாக 16 புரோட்டாக்கள் சாப்பிட்டு வெற்றி பெற்றார்.


