தர நிர்ணய அமைவனத்தில் மத்திய அமைச்சர் ஆய்வு
சென்னை: தரமணியில் உள்ள, இந்திய தர நிர்ணய அமைவனத்தின், தென் மண்டல ஆய்வகத்திற்கு, மத்திய அரசின், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது வினியோக அமைச்சகத்தின் இணை அமைச்சர் பி.எல்.வர்மா, வருகை தந்தார்.
அவரை, இந்திய தர நிர்ணய அமைவனத்தின் விஞ்ஞானியும், தென் மண்டல துணை இயக்குனர் ஜெனரலுமான வினோத் வரவேற்றார்.
இந்திய தர நிர்ணய அமைவனத்தின் செயல்பாடுகளை பாராட்டிய அவர், ஆய்வகத்தின் பரிசோதனை பிரிவுகளை பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, அறிவியல் பூங்காவில் மரக்கன்றுகளை நட்டார்.
