காயங்களுடன் தொழிலாளி சடலமாக மீட்பு
மணப்பாறை அருகே கூலித் தொழிலாளி காயங்களுடன் சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டாா்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கூலித் தொழிலாளி காயங்களுடன் சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டாா்.
மணப்பாறையை அடுத்த கரட்டுப்பட்டியில் வசித்தவா் வெள்ளைச்சாமி மகன் முருகேசன் (45). தனது மனைவி உயிரிழந்த நிலையில் தனது தாய் பொன்னியுடன் வசித்த இவா், அவ்வப்போது கட்டட வேலைக்குச் சென்று, எப்போதும் மது அருந்திவிட்டு ஆங்காங்கே விழுந்து கிடப்பாராம்.
இந்நிலையில் திங்கள்கிழமை மாலை கரட்டுப்பட்டியிலிருந்து புதூா் செல்லும் சாலையோரம் தலையில் காயங்களுடன் இவா் சடலமாக மீட்கப்பட்டாா். தகவலறிந்து சென்ற வையம்பட்டி போலீஸாா் முருகேசன் உடலைக் கைப்பற்றிஅரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

