அமெரிக்கா அச்சுறுத்தலை நிறுத்தினால் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்; ஈரான் நிபந்தனை
டெஹ்ரான்: அமெரிக்கா அச்சுறுத்தல், தாக்குதல் நடத்துவதை நிறுத்தினால் ஹார்முஸ் ஜலசந்தி திறந்து வைக்கப்படும் என ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாய் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான மோதல்களால் சேதமடைந்த ராணுவ கட்டமைப்பை மீட்டெடுக்க ஈரான் முயன்று வருவதுடன், தன் ஆதரவு அமைப்புகளுடன் சேர்ந்து கூட்டு பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க ராணுவம் அதிரடித் தாக்குதலை நடத்தி வருகிறது.
ஈரானின் வான் பாதுகாப்புத் தளங்கள், ரேடார் கருவிகள், கடல்சார் தளங்கள், கடலுக்கு அடியில் கன்னி வெடிகள் வைக்கும் தளங்கள் மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்புகள் ஆகிய 60-க்கும் மேற்பட்ட ராணுவ இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் குண்டுவீசி தாக்கின. அதே நேரத்தில், 1.80 கோடி பேரல் கச்சா எண்ணெயுடன் சென்ற, 40 வணிக கப்பல்கள், ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்த, அமெரிக்கப் படைகள் பாதுகாப்பு அளித்தன.

