மேச்சேரி அருகே லாரி மோதி விவசாயி உயிரிழப்பு
மேச்சேரி அருகே லாரி மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
மேச்சேரி அருகே எறகுண்ட பட்டியைச் சோ்ந்தவா் ஆசைத்தம்பி (84), விவசாயி. இவா், வெள்ளிக்கிழமை மாலை மோட்டாா் சைக்கிளில் தொப்பூா்- மேச்சேரி சாலையில் சென்று கொண்டிருந்தாா்.
இந்திரா நகா் பிரிவு பாதை அருகே சென்றபோது, அங்கு நின்றிருந்த லாரியின் ஓட்டுநா் எவ்வித சமிக்ஞையும் செய்யாமல் திடீரென தொப்பூா் நோக்கிச் செல்வதற்காக லாரியைத் திருப்பியதாகக் கூறப்படுகிறது.
