பாரதிராஜா நடித்த கடைசி படமான ‘புலவர்” படத்தின் டீசர் வெளியீடு
சென்னை,தற்போது ‘புலவர்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. பாரதிராஜாவின் திரை தோற்றத்தை மீண்டும் ரசிகர்கள் காணும் வாய்ப்பு கிடைத்திருப்பதால், இப்படத்தின் டீசர் ரசி
தற்போது ‘புலவர்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. பாரதிராஜாவின் திரை தோற்றத்தை மீண்டும் ரசிகர்கள் காணும் வாய்ப்பு கிடைத்திருப்பதால், இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் கிராமத்து மணம் கமழும் கதைகளையும், எதார்த்தமான மனிதர்களையும் திரையில் உயிர்ப்பித்து தனக்கென ஒரு பாணியை உருவாக்கியவர் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா. இயக்குநராக மட்டுமின்றி, நடிகராகவும் பல படங்களில் தனது திறமையை வெளிப்படுத்திய அவர், தமிழ் திரையுலகில் அழியாத தடம் பதித்துள்ளார்.
பல வெற்றிப் படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த பாரதிராஜா, இந்த ஆண்டு ஜூன் 10-ந் தேதி காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு மட்டுமின்றி, அவரை நேசித்த ரசிகர்களுக்கும் பெரும் இழப்பாக அமைந்தது.


