மராட்டியத்தில் கொடூரம்: 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர்
மும்பை,மராட்டியத்தில் 6 வயது சிறுமியை முதியவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் ஜல்னா மாவட்டத்தை சேர்ந்த முதியவர்
மராட்டியத்தில் 6 வயது சிறுமியை முதியவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய மாநிலம் ஜல்னா மாவட்டத்தை சேர்ந்த முதியவர் தினேஷ் சுவர்னகர் (வயது 60). இவர் தனது வீட்டிற்கு அருகே வசிக்கும் தம்பதியின் 6 வயது பெண் குழந்தைக்கு சாக்லேட் தருவதாக கூறியுள்ளார்.
இதையடுத்து, சிறுமியை நேற்று தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர், வீட்டில் வைத்து சிறுமியை தினேஷ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தனக்கு நடந்த கொடூரம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் கூறியுள்ளார்.
