டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை பேராசிரியர் மீது மாணவியர் பாலியல் புகார்; விசாரணை தீவிரம்
புதுடில்லி: டில்லியில் உள்ள ஜே.என்.யு., எனப்படும், ஜவஹர்லால் நேரு பல்கலையில் பணிபுரியும் பேராசிரியர் மீது 10க்கும் மேற்பட்ட மாணவியர் பாலியல் புகார் அளித்ததை அடுத்து, விசாரணை தொடங்கியுள்ளது.
டில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலை செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்த பல்கலையில் டில்லி மட்டுமின்றி நாடு முழுதும் இருந்தும் ஏராளமான மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். இந்த பல்கலையின் பணிபுரியும் பேராசிரியர் ஒருவர் மீது பாலியல் புகார் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பல்கலை வளாகத்திலேயே தங்கியுள்ள அந்த பேராசிரியர், மாணவிகளை தன் இல்லத்திற்கு அழைத்து பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொள்ள முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நடந்த வாய்மொழி தேர்வின்போது, மாணவியரிடம் ஆபாசமான கருத்துகளை அவர் தெரிவித்ததாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.

