`கழுத்தில் மாட்டிய டிராக்டர் டயர்' - அசௌகரியத்துடன் திரிந்த காட்டு யானை; வனத்துறை நடவடிக்கை என்ன?
கழுத்தில் டிராக்டர் டயர் மாட்டிக்கொண்ட காட்டு யானையை மீட்க வனத்துறை நடவடிக்கை.
அசாம் மாநிலம் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள நுமாலிகர், பொகியல் பகுதியில் தேயிலைத் தோட்டம் இருக்கிறது. இந்தப் பகுதியில், கழுத்தில் டிராக்டர் டயர் மாட்டிக்கொண்ட நிலையில் காட்டு யானை ஒன்று உலா வந்த காட்சி அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மொரோங்கி வனப்பகுதியில் உணவு தேடி அலைந்த இந்த யானையைக் கண்ட பொதுமக்கள், வனத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். வனப்பகுதியில் கிடந்த டிராக்டர் டயரை யானை தனது தும்பிக்கையால் ஆர்வம் காரணமாகத் தூக்க முயன்றபோது, அது எதிர்பாராதவிதமாக அதன் கழுத்தில் நழுவி மாட்டிக்கொண்டிருக்கலாம் என்று வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)